
கொழும்பில் மீண்டும் பற்றி எரியும் கடை
கொழும்பு – ஆமர் வீதி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆமர் வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற திடீர் தீப்பரவல் காரணமாகவே வாகன நெரிசல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
