வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலிட வேண்டும்: ஆளுநர் சார்ள்ஸ்

-யாழ் நிருபர்-

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பவுல் ஸ்டீபன் (Paul Stephens) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்வடக்கிலுள்ள வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்புஸை நேற்று புதன் கிழமை ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார். மேலும் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்துமாறும் உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், பொருளாதார நிலையிலும் முன்னேற்றத்தை காண முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்