கராப்பிட்டியவில் புதிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு

காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகப்பேறு வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை திறந்து வைத்தார்.

வைத்தியசாலையில் 640 படுக்கைகள், 06 சத்திர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் உள்ளன.

இந்த வைத்தியசாலை இலங்கையில் மாத்திரமன்றி தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலையாகவும் விளங்குகிறது.