
திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு
குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் தீயினால் பேருந்து சேதமடைந்துள்ளது.
அதன் பின்னர் அங்கு வந்த குருணாகல் தீயணைப்பு பிரிவினர் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில்இ பயணிகள் எவருக்கும் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
