
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து: மூவர் காயம்
-பதுளை நிருபர்-
மஹியங்கனை வீதியில் இன்று புதன் கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
தெஹி அட்டகண்டிய டிப்போவிற்குச் சொந்தமான பேருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது காலை 9.30 மணியளவில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 5 வயது குழந்தை உட்பட மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கிராதுருகொட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
