
சீமெந்து தொழிற்சாலையில் திருடிய இருவர் கைது
யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் நேற்று திங்கட்கிழமை வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
