
மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி
கம்பஹாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.
ஹெனாவத்தை பகுதியை சேர்ந்த மஹாலியனகே சஹான் திமந்த பெரேரா (வயது – 18) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை தனது தாய் மற்றும் மூத்த சகோதரரிடம் காட்டிவிட்டு அதை தன் நண்பனிடம் ஒப்படைக்க சென்று கொண்டிருந்த போதே கொட்டாவ ஹைலெவல் வீதியில் வைத்து வேன் மற்றும் கெப் ரக வாகனதுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் போட்டிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்ய வேண்டுமென இவர் எதிர்பார்த்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
