
மட்டக்களப்பில் தீக்குழியில் விழுந்த பெண் காயம்
மட்டக்களப்பு கல்லடி வேலுக்குழனி பத்திர காளி அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்று கிழமை தீ மிதிப்பில் ஈடுபட்ட பெண் தீ குழியில் விழுந்து காயமடைந்துள்ளார்.
வேலுக்குழனி, 4 ஆம் குறுக்கை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 50 வயது மதிக்க தக்க நகை கடை உரிமையாளரின் மனைவியே இதன் போது காயமடைந்துள்ளார்.
பத்திர காளி அம்மன் கோவில் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான நேற்று தீ மிதிப்பில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த தீ மிதிப்பில் ஈடுபட்ட பெண் தவறுதலாக தீ குழியில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
