
பால் தேநீரின் விலை குறைப்பு?
பால் மாவின் விலை குறைக்கப்பட்டதன் நன்மையை கருத்திற் கொண்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. குறைக்கப்பட்ட விலையில் உணவகங்களுக்கு பால் மா கிடைக்க பெற்றதன் பின்னர், வாடிக்கையாளர்களுக்கு அதன் நன்மையை பெற்றுக் கொடுக்க வேண்டியது எமது கடமையாகும்.
ஆகையால், பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவிற்குட்பட்ட விலையில் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
