
தெல்லிப்பழை துர்க்காதேவியின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கடந்த 20 ஆம் திகதி கர்மாரம்பம் விநாயக பூஜையுடன் ஆரம்பமாகியது. இந்நிலையில் இன்று நான்கு கோபுரத்துக்குகான கலச கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று காலை 05.10 மணியளவில் நான்கு பக்க கோபுர கலச மஹாகும்பாபிஷேகம் இனிதே இடம் பெற்றது.
பின் பாரிவார மூல மூர்த்திகளுக்கான மஹா கும்பாபிஷேகம் 8.40 முதல் 9.30 மணியில் சுபவேளையில் கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். மஹாகும்பாபிஷேகத்தினை தொடர்ந்து எதிர்வரும் 48 நாள் மண்டலாபிஷேக உற்சவம் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

