களனி பல்கலை மாணவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதன் நுழைவாயிலை மறித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மொனராகலை பகுதியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதியின் நிர்வாக அதிகாரிகளின் கவனக்குறைவினாலேயே மாணவன் உயிரிழந்துள்ளதாக மாணவர்கள் தெரிவிப்பதுடன் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.