
பிரபல ஆடையகத்தில் தீ பரவல்
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து 4 மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 11 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ஆடையகத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்த ஆடையகத்திற்குள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும் தீப்பரவல் காரணமாக காலி கொழும்பு பிரதான வீதியில் வாகன நெரிசல் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், தீப்பரவலுக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
