திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது அம்பாள் ஆலயத்தில் இருந்து புராதன சிம்ம வாகனத்தில் சமுத்திரக்கரைக்கு சூரியோதயத்தில் எழுந்தருளி பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.