
திருகோணமலை – திருக்கோணேஸ்வர பெருமானின் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
-மூதூர் நிருபர்-
திருகோணமலை – திருக்கோணேஸ்வர பெருமானின் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது
தெட்சன கைலாயம் திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின் வருடார்ந்த பங்குனி உத்தர பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 21 நாட்கள் இடம்பெறவுள்ள உற்சவத்தின் 17ஆம் நாள் 09.04.2024 அன்று செவ்வாய்கிழமை இரதோற்சவமும் மறுநாள் புதன்கிழமை பாபநாச தீர்த்த உற்சவமும் இடம்பெற்று மாலை துவஜா அவரோகணம் எனப்படும் கொடி இறக்க நிகழ்வும் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து 11.04.2024 வியாழக்கிழமை பூங்காவன திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தெற்போற்சவம் இடம்பெறும்.
உற்சவ காலங்களில் காலை 8 மணிக்கும் மாலை 3:30 மணிக்கும் அபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து தம்ப பூசை, வசந்த மண்டப பூசை நடைபெற்று பகல் திருவிழாவின் பின்னர் சுவாமி உள்வீதி வலம் வந்தும் மாலை திருவிழாவில் பின்னர் உள்வீதி, வெளி வீதி வலம் வந்தும் அடியார்களுக்கு அருள் காட்சி கொடுப்பார்.




