பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு, ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனை, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.