
வர்த்தக நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரெ.நேசேந்திரன் (வயது – 43) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று காணப்பட்ட நிலையிலேயே இன்று அதிகாலை தனது வர்த்தக நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
