
பக்கத்து வீட்டுகாரரால் வன்புணரப்பட்ட பெண்
கம்பகா மாவட்டத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த 09/04/2023 அன்று, குறித்த பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்த போது, ”அலிண்டா” என்ற பக்கத்து வீட்டுக்காரர் அவளுடைய வீட்டிற்கு வந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், மேலும் 27/11/2023 அன்று மீண்டும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபரின் அச்சுறுத்தல் காரணமாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படவில்லை எனவும் இந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியதால், நேற்று வியாழக்கிழமை பிபில பொலிஸ் நிலையத்துக்கு வந்து அப்பெண் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
