கிணற்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீட்டின் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பினோயா மேல் பகுதியை சேர்ந்த கதிரவேல் ரோஹித் (3 வயது 9 மாதம்) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணாமல் போனதால், குழந்தையின் தந்தை மற்றும் தோட்ட வீடுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.