ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்கு பகுதியான இபராக்கி மாகாணத்தில் இன்று வியாழக்கிழமை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.