13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல தடை

ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி சுமார் 330,000 பெண் பிள்ளைகள் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதன் பின்னர் பெண் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.