
பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்
கம்பகா – கனேமுல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த ஒருவர் நேற்று புதன் கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய இராணுவ சேவையிலிருந்து தப்பி வந்தவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கணேமுல்ல சுமேத மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது, சந்தேக நபர் விஷேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கசூடு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேக நபர் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கடந்த 9ஆம் திகதி ஜா-எல, தன்டுகம பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
