
கத்தி குத்தில் முடிந்த ஐம்பது ரூபா கொடுக்கல் வாங்கல்
களுத்துறை பகுதியில் ஐம்பது ரூபா கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சந்தேக நபரை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலதொட்ட கொடபரகஹஹேனே பகுதியில் வசிக்கும் கந்தப்பிள்ளை யோகநாதன் என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
