
பெண் பொலிஸ் அதிகாரி வாகன விபத்தில் மரணம்
களுத்தறையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி மோதி உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் தொடங்கொட, புஹம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த தமயந்தி வீரசூரிய என்ற பெண் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகளை முடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி மத்துகமவிலிருந்து களுத்துறை நோக்கிச்செல்லும் வீதியைக் கடக்கும் போதே விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
