கடற்கரை புதர்களுக்குள் காதலர்கள் உல்லாசம்: காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபர் கைது

காலி தடல்ல கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

தடல்ல கடற்கரைக்கு அண்மித்த புதர்களுக்கு அருகில் உல்லாசமாக இருக்கும் காதலர்களை அணுகும் சந்தேக நபர், அங்கு தங்க வேண்டாம், பொலிசார் வருவார்கள் என கூறி, அருகிலுள்ள பிறிதொரு புதர் மண்டிய இடத்துக்கு காதல் ஜோடிகளை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பகுதி அதிக புதர் மண்டி, மறைவான இடங்களை கொண்டது. அங்கு காதலர்கள் விரும்பியதை போல நடந்து கொள்ள வாய்ப்புள்ளது.

அந்த பகுதிக்கு சென்ற காதலர்கள் உல்லாசமாக இருக்கும் போது, புதர்களுக்குள் மறைந்திருந்த சந்தேகநபர் அவற்றை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் காதலர்கள் அந்தரங்கமாக உள்ள வீடியோக்களை பணத்துக்காக இணையங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரால் இதுவரை எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட காணொளிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை மாணவர்களுடையவை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதோடு கைதான சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.