
ரயிலில் மோதி ஒருவர் மரணம்
மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலதுவ ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கி சென்ற ரயில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் மாத்தறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
