வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை

பிரேசில் நாட்டில் வெப்ப அலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலை நகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகளவு வெப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷ்ணத்தை தணிப்பதற்காகவும், இதமான காற்று வாங்குவதற்காகவும் பொதுமக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.