திடீரென குறைந்த தங்க விலை: இன்றைய நிலவரம்

கடந்த சில நாட்களாகவே உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று செவ்வாய் கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று புதன் கிழமை வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 657,543 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் 185,600 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 170,150 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் 162,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.