
மின் கம்பத்தில் தீயை பார்த்தவர் மயங்கி விழுந்து மரணம்
தலவாக்கலை பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீன் தோட்ட மேற் பிரிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நபர் உயிரிழந்துள்ளார்.
தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிருப்பு வீட்டு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் திடீரென மின் இணைப்பு வயர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் தரையில் வீழ்ந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீன் தோட்ட மேற் பிரிவை சேர்ந்த சுப்பையா சண்முகம் (வயது – 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீன் மேல் பிரிவு தோட்டத்தில் மின் இணைப்பு வயர்கள் அடிக்கடி தீப்பிடிப்பதாக தெரிவிக்கும் தோட்ட மக்கள் இத் தோட்டத்தில் தொடர் குடியிருப்புகள் அருகில் காணப்படும் மின் கம்பங்களில் மின் கசிவுகள் மற்றும் இணைப்பு வயர்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை பிராந்திய தொழிநுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
