
பல கோடி ரூபா மதிப்புடைய தங்க நகைகளுடன் இருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்ட விரோத நகைகளுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10 கோடி ரூபாவிற்கும் அதி பெறுமதியான நகைகளுடன், டுபாயிலிருந்து வந்த அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை சேர்ந்த இரு பயணிகளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபான போத்தல்களை அகற்றி வெளிநாட்டு மதுபான போத்தல்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் பெட்டிகளில் பொதியிட்டு விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த நகைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருங்கொட தெரிவித்தார்.
நகைகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
