
உழவு இயந்திர விபத்து: ஒருவர் உயிரிழப்பு
மாத்தளை வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
உழவு இயந்திரத்தில் பயணித்த 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்தவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
