வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை – இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பலாங்கொடை – இரத்தினபுரி பிரதான வீதியில் ஹொரகெட்டிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.