ஃபுட் சிட்டிகளில் காலாவதியான பொருட்கள்

-யாழ் நிருபர்-

யாழ் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஃபுட் சிட்டிகளை பரிசோதித்த போது காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள் என்பன இரு ஃபுட் சிட்டிகளில் கைப்பற்றப்பட்டது.

குறித்த ஃபுட் சிட்டி உரிமையாளர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை மேலதிக நீதவான் நீதிமன்றில், பா. சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன் போது ஒருவர் வருகைதரவில்லை. மற்றையவருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் தண்டப்பணமாக 180,000 அறவிடப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.