இலங்கையில் ரயிலில் “மொட்டைமாடி”

இலங்கை ரயில்வேயின் பிரதான இயந்திர பொறியியல் திணைக்களம் திறந்த பார்வைத் தளத்தை உள்ளடக்கிய ரயில் பெட்டியை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலையகத்தின் இயற்கைக்காட்சிகளை ரசிக்க ஏதுவாக, முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட குறித்த ஏற்பாடு, மலையக ரயில் சேவையில் எதிர்காலத்தில் சேர்க்கப்படும்.

பாவனையில் இல்லாத பழைய ரோமானிய புகையிரத பெட்டியே இவ்வாறு 30 மில்லியன் செலவில் புதிய பார்வைத் தளமாக மாற்றப்பட்டுள்ளது.