
உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள்
இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி குறித்த மாபெரும் வெற்றியை பதிவுசெய்தது.
குறித்த இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.
