வெள்ளவத்தை நபர் சிவனொளிபாத மலையில் மரணம்

ஹட்டன் – நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த வேளையில் ரது பலம் பகுதியில் திடீர் சுகவீனம் அடைந்தவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 6, வெள்ளவத்தை, பெரகும்பா வீதியில் வசிக்கும் நாராயணன் சாபு (வயது – 73) என்பவரே மரணமடைந்துள்ளார்.

திடீர் சுகயீனமடைந்த அரை உறவினர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர் எனினும், அன்று இரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மஸ்கெலியா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

அவரது உடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பட்டு வைத்தியசாலையில் உடற் கூற்று பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

சிவனொளிபாதமலை பருவக்காலம் இவ்வருடம் ஆரம்பமானது முதல் இதுவரை சிவனொளி பாதமலைக்கு தரிசனம் செய்யவந்தவர்களில் அறுவர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.