
கிணற்றில் வீழ்ந்து 6 வயது சிறுமி மரணம்
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மதுரங்குளி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
