விருந்தக உரிமையாளர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

மாத்தறை மாவட்டம் வெலிகமவில் விருந்தக உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மிரிஸ்ஸ – பரகல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இன்று சனிக்கிழமை காலை இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு அருகில் உள்ள மரமொன்றை வெட்டுவது தொடர்பில் விருந்தக உரிமையாளர்கள் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த விருந்தக உரிமையாளர்களில் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.