பாடசாலைகளில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தல்

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளார்.

இந்தநிலையில் மனித உடலின் சராசரி வெப்பநிலை சுமார் 37 பாகை செல்சியஸ் ஆக காணப்பட வேண்டும். தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றர்.