விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் சோரா ஏஐ

ஓபன் ஏஐ நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி தெரிவித்துள்ளார்.

எழுத்து மூலமாக தருகிற உள்ளீட்டை விடியோவாக மாற்றக் கூடிய ‘சோரா ஏஐ’ என்கிற செயலியை ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது.

தற்போது தேர்வு செய்யப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இயக்குநர்களுக்கு மட்டுமே சோரா பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா பேசும்போது, சோராவை இன்னும் மெருகேற்றி விடியோ உடன் ஆடியோவையும் தருகிற வகையில் உயர்த்தவுள்ளோம் என்றார்.