பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து

கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிலில் நேற்று வியாழக்கிழமை காலை   பல்கலைகழக மாணவர்களை ஏற்றி சென்ற அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தேசிய வணிக முகாமைத்துவ  பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிலின் ஒரு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.