
பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை
கம்பஹா மாவட்டம் சீதுவ பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை இரவு விடுதியின் அறைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளார்.
பலுகொல்லாகம – மெகொடவெவ பகுதியில் வசிக்கும் 26 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தகாத உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
