மட்டக்களப்பு விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டி இன்று வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பழைய மாணவர்களின் முழுமையான அனுசரனையில் இடம்பெற்ற இந்த போட்டியில் மூன்று இல்லங்களும் அலங்கரிக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முதலாம் இடத்தினை இளங்கோ இல்லமும், இரண்டாம் இடத்தினை வள்ளுவர் இல்லமும், மூன்றாம் இடத்தினை கம்பர் இல்லமும் பெற்றுகொண்டது.

இதேவேளை அதிதிகளால் மற்றும் பழையமாணவர்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

SONY DSC