
காலியில் சுற்றுலா துறைமுகம்
காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக மேம்படுத்துவதற்கான அபிப்பிராயங்கள் கோரப்பட்டுள்ளன.
துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளோம் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் கப்பல்கள் மற்றும் படகுகள் வருகை தரும் வகையில் துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
