
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மா ஒரு கிலோகிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், பருப்பு ஒரு கிலோகிராம் 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில காலமாக பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
