விழுந்து நொருங்கிய ரஷ்ய போக்குவரத்து விமானம்: 15 பேர் பலி

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் இன்று இராணுவ போக்குவரத்து விமானமொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, விமானம் புறப்படும்போது என்ஜினில் தீப்பற்றியதுதான் விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.