ஹெரோயினுடன் இளைஞன் கைது

-பதுளை நிருபர்-

பதுளை மெதபதான பகுதியில் 5710 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் நேற்று செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை, மாபகதேவாவ, கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மஹியங்கனையிலிருந்து பதுளைக்கு போதைப்பொருள் கொண்டுவருவதாக
பதுளை பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.