மட்டக்களப்பு ஆதியூர் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வர பெருமானின் வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு ஆதியூர் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வர பெருமானின் வருடாந்த திருவிழா நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம் பங்குனி மாதம் 2ம் நாள் (15.03.2024) வெள்ளிக்கிழமை சவ்பு நிதியும், கார்த்திகை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய மேடலக்கின சுபமுகூர்த்த வேளையில் முற்பகள் 9.20மணி தொடக்கம் முற்பகல் 10.50மணி வரையான நேரத்தில், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

இதனையடுத்து பங்குனி உத்தரபட்சமாகிய சோபகிருது வருடம் பங்குளி 11ம் நாள் (24.03.2024) ஞாயிற்றுக்கிறமை உத்தர நட்சத்திரமும், பௌர்ணமி திதியன்று மாலை கொடியிறக்க நிகழ்வோடு வைரவர் பூசையுடன் மகோற்சவம் நிறைவுபெறும்.

அனைத்து பக்தர்களும் திருவிழா காலத்தில் ஆலயத்திற்கு வந்து விக்கினேஸ்வரப் பெருமானின் அருள் பெற்று செல்லுமாறு ஆலய நிர்வாக சபை அழைப்பு விடுத்துள்ளது.