
மட்டக்களப்பில் முக்கியஸ்தர் வீட்டில் பாரிய கொள்ளை
மட்டக்களப்பு லாயிட்ஸ் அவென்யூ வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீட்டில் இருந்து இருபத்தேழரைப்பவுண் (27 1/2) தங்கம் மற்றும் 310, 000 ரூபா பணம் என்பவை திருடப்பட்டுள்ளது.
முன்னாள் மாநகர சபை உறுப்பினர் திருமதி சசிகலா விஜேதேவா விட்டிலேயே குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
