அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக எம்.ஏ முனாஸீர் நியமனம்

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த எம்.ஏ முனாஸீர் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலையை பிறப்பிடமாகவும்இவசிப்பிடமாகவும் கொண்ட இவர் கிழக்கு மாகாண சபையில் மாகாண திட்டமிடல் செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக 15 வருடங்களாக கடமையாற்றி இன்று திங்கட்கிழமை பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்ரம முன்னிலையில் கடமைகளை பெறுப்பேறுக்கொண்டார்.