
அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை
மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் காணாமல் போயுள்ளார்.
சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வெளியில் சென்ற நிலையிலே குறித்த மாணவன் இது வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது.
குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.
